Madurai Meenakshi Amman Chithirai Festival : மதுரையில் இந்த ஆண்டும் கோவில் வளாகத்திலேயே நடக்கிறது வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு

கோப்புப் படம்

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது. கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பூஜை நேரம், வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    மதுரை சித்திரை திரு விழாவின் முக்கிய. நிகழ்வான . வைகையாற்றில் அழகர்  இறங்கும் நிகழ்ச்சி கொரோனா  பரவல் காரணமாக அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி நடத்தப்படுகிறது . கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் , ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி நடத்தப்பட்டது.

    இந்தாண்டும் கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக கோயில் வளாகத்திலேயே நடத்தப்பட உள்ளது . கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா நாளை ( ஏப்ரல் 23 ) தொடங்கி  மே 2ஆம் தேதி வரை கோயில் வளாகத்தில் நடக்கிறது. ஏப்ரல் 26ஆம் தேதி கள்ளழகர் அலங்காரத்தில் எதிர்சேவை காலை 9:15 மணி முதல்  10:00 மணி வரை நடக்கிறது. ஏப்ரல் 27ஆம் தேதி ஆண்டாள் மாலை சாற்றுதல் நடைபெறுகிறது.

    அதன் பிறகு ஆடி வீதியில் காலை 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் வைகையில் இறங்குவதாக கருதி அழகர் புறப்பாடு நடக்கிறது. ஏப்ரல் 29ஆம் தேதி காலை 10:00 மணிக்கு மண்டூக  முனிவருக்கு மோட்சம் அளித்தல், ஏப்ரல் 30ஆம் தேதி இரவு பூப்பல்லாக்கு போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.

    மேலும் படிக்க...Today Rasi Palan: இன்றைய ராசி பலன் (ஏப்ரல் 22, 2021)

    இந்த திருவிழா நாட்களில் தினமும் காலை 10:30  மணி முதல் மாலை 4:00 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் அந்தந்த நாளுக்கான வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அழகர் அருள் பாலிப்பர். பூஜை நேரம் , வீதி உலா நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சவோ, திரி எடுக்கவோ அனுமதி இல்லை. தீர்த்தம் , அர்ச்சனை , மரியாதை , மாலை சாற்றுதல் கிடையாது . முகக்கவசம் அணியாதோருக்கு கோயி லுக்குள் அனுமதியில்லை .

    இந்த நிகழ்ச்சிகளை  எல்.இ.டி திரை மூலம் கோயில் பகுதிகள் , தல்லா குளம், வண்டியூர் கோயில் முன் பக்தர்கள் காணலாம் . தவிர www.tnhrce.gov . in , www.alagarkovil.org , youtube Arulmigu Kallalagar Thirukkoil , algarkoil , youtube temple live streaming மூலமாகவும் காணலாம் . ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    செய்தியாளர்: கருணாகரன், மதுரை



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: