Home /News /tamil-nadu /

மதுரை சித்திரை திருவிழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

Madurai Chithirai festival 2022 : இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா பக்தர்களுடன் நடைபெற இருக்கிறது, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    திருவிழாக்கள் நகரான மதுரையில், சித்திரைத் திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் மட்டுமில்லாது, உலக நாடுகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வது வழக்கம். அந்த நாட்களில் மதுரையே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

    உலகப் புகழ்பெற்ற இந்த சித்திரைத் திருவிழா மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் என இரண்டு கோயில்களிலும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழா குறித்த அறிவிப்பு அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பாக முறையாக வெளியிடப்படும். அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற சித்திரை திருவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு பக்தர்களுடன் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது.

     



    ஏப்ரல் 14ஆம் தேதி அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரல்  திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. சித்திரை திருவிழா இந்த ஆண்டு பக்தர்களுடன் நடக்க உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Festival, Kallazhagar, Madurai

    அடுத்த செய்தி