Home /News /tamil-nadu /

தேசிய அளவிலான சிறுவர்களுக்கான கார் பந்தயம்- முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழக சிறுவன்

தேசிய அளவிலான சிறுவர்களுக்கான கார் பந்தயம்- முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழக சிறுவன்

கார் பந்தயத்தில் வென்ற சிறுவன்

கார் பந்தயத்தில் வென்ற சிறுவன்

தேசிய அளவில் நடைபெற்ற "மெரிட்டர்ஸ் கப் 2022" கார் பந்தயத்தில் மதுரையைச் சேர்ந்த சிறுவன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

    மதுரை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் அருணின் மகன் அனுஜ் (10). இவர், தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே கார் பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். ஃபார்முலா 1 என்று அழைக்கக்கூடிய கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பமாகவும், கனவாகவும் இருந்துள்ளது.

    இவர்களது பெற்றோர்கள் மகனின் முயற்சியை ஊக்குவிக்கும் வண்ணம், கர்நாடகாவில் உள்ள சிறுவர்களுக்கான கார் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைத்துள்ளனர்.

    இந்நிலையில், சமீபத்தில் பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிறுவர்களுக்கான கார் மெரிட்டர்ஸ் கப் 2022 சாம்பியன்ஷிப் பந்தயம் நடைபெற்றது. இதில், 9 வயது முதல் 12 வயது வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நடந்த சிறிய ரக கார் பந்தயத்தில் டெல்லி, அஸ்ஸாம், பீஹார், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இளம் வீரர்கள் கலந்துகொண்டனர்.

    இறுதிச்சுற்றில் கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தேர்வு பெற்ற நிலையில், தமிழகத்தில் இருந்து கலந்துகொண்ட அனுஜ் மூன்று சுற்றில் இரண்டு சுற்றில் முதலிடம் பெற்று மெரிட்டர்ஸ் கப் 2022 வெற்றி பெற்றார்.

    இது குறித்து கார் பந்தய வீரரான அனுஜ் கூறுகையில், ‘இந்த போட்டியில் முதலிடம் பெற்று உலக அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். பின், வருங்காலத்தில்,  ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும். தான் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற விருதுகளை தமிழக முதல்வரிடம்  சமர்பித்து ஆசி பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும், இவர் கடந்த வருடம் கர்நாடகாவில் நடைபெற்ற "கோ- கார்டிங் சாம்பியன்ஷிப்" கார் பந்தயததில் கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Madurai

    அடுத்த செய்தி