மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் மினரல் வாட்டர் சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவரது மகன் சுதர்சன், தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சமீப காலமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நிதி நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு உதவத் தோள் கொடுப்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுத்ததன் பெயரில் ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த பள்ளி மாணவன் சுதர்சன் தனது உண்டியலில் சேமித்த 611 ரூபாய் மற்றும் அவரது தந்தையின் ஒரு நாள் ஊதியமான தொகை 600 ரூபாய் என மொத்தமாக 1,211 ரூபாயை காசோலைகளாக இலங்கை மக்களுக்காக இன்று மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அனிஷ் சேகரிடம் வழங்கினார்.
சிறுவனின் இந்த செயலலை ஏராளமானோர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன், மதுரை. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.