நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நபர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து வாஷிங் மெஷின், ஆண்ட்ராய்டு மொபைல், பிரஷர் குக்கர், சேலை - வேட்டிகள் வழங்கப்படும் என்று
மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற 4 மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதை தொடர்ந்து நாளை (அக்டோபர் 10) 5வது மெகா கொரோனா தடுப்பூ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் மதுரை மாநகராட்சி திட்டமிட்டு பணியாற்றி வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்க பரிசு திட்டமும் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. முதல் பரிசாக துணி துவைக்கும் இயந்திரமும் (வாஷிங் மிஷின்), 2ம் பரிசாக ஆண்ட்ராய்டு செல்போன் 2நபர்களுக்கும் , 3ம் பரிசாக பிரசர் குக்கர் 10 நபர்களுக்கும் சிறப்பு பரிசாக 30 நபர்களுக்கு சேலைகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் வழங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு.. தீயில் கருகி கணவன் மனைவி உயிரிழப்பு
மதுரையில் நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் 75 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.