மதுரை மேம்பால விபத்து: ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்த பொறுப்பாளர் கைதாகி விடுதலை

மதுரை பாலம்

மதுரை மேம்பால விபத்து வழக்கில் ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டு தற்போது சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  மதுரை நத்தம் சாலையில் பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டும்பணியில் ஊழியர்கள் நேற்று வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

  இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  மேம்பாலம் இடிந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலை துறை கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்டப் பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில் ஹைட்ராலிக் மெஷின் ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர் பாஸ்கரனை மட்டும் அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சொந்த ஜாமீனில் விடுவித்துள்ளனர். விபத்திற்கு காரணமாக கூறப்படும் ஹைட்ராலிக் கருவியின் தன்மை குறித்து திருச்சி என்.ஐ.டி தொழில்நுட்ப நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்த பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
  Published by:Karthick S
  First published: