"மதுரை மேம்பால விபத்து நடந்தபோது பொறியாளர் களத்தில் இருந்தாரா?" : என்.ஐ.டி. பேராசிரியர் பாஸ்கர் விசாரணை

Madurai

பாலத்தை தூக்கிய போது அதற்கு தேவையை விட அதிக பளுவை தாங்க கூடிய ஹைட்ராலிக் ஜாக்கி கருவி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள்.

  • Share this:
    மதுரை மேம்பால விபத்து குறித்து சம்பவ இடத்தில் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்ட என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர், முழுமையான ஆய்வு முடிந்து 10 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆக.28 மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள்  பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக்  மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

    விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

    அதன்படி, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், கேரளாவை சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ் மற்றும் டெல்லியை சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் டோமிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    Also read: மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் – சிக்கிய 50 வீடியோக்கள்!

    இந்நிலையில், இன்று திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் மட்டும் இன்று நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தார், மேற்பார்வை பொறியாளர் உள்ளிட்ட நபர்களிடம் விபத்திற்கான காரணங்கள் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தினார்.

    பின்னர் என்ஐடி பேராசிரியர் பாஸ்கரன் அளித்த பேட்டி :

    விபத்து குறித்து முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டேன். பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் கேட்டறிந்தேன்

    வரும் சனிக்கிழமை திருவனந்தபுரம் மற்றும் டெல்லியை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய ஆய்வுக்குழு உறுப்பினர்கள் நேரில் வந்து ஆய்வில் ஈடுபடுவார்கள்.சனிக்கிழமை ஆய்வு முடிவடைந்து, 10 நாட்களுக்கு பின் ஆய்வறிக்கையை சமர்பிக்கவுள்ளோம்.

    Also read:  அல்காசர் போல புதிய மாற்றங்களுடன் ஹூண்டாய் கிரெட்டா அறிமுகம்!

    பாலத்தை தூக்கிய போது அதற்கு தேவையை விட அதிக பளுவை தாங்க கூடிய ஹைட்ராலிக் ஜாக்கி கருவி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்கள். அதன் தரம் குறித்தும் ஆய்வு செய்ய உள்ளோம்.

    விபத்தின் போது இரு பணியாளர்கள் மட்டும் தான் இருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்தவுள்ளோம். பேரிங் பொருத்தும் பணியின் போது கட்டாயம் ஒரு தொழில்நுட்ப பொறியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அவர் பணியின் போது இருந்தாரா என்பதை விசாரிக்க உள்ளோம்.

    பணியின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள், பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஒப்பந்த அறிக்கைகளை முழுமையாக படித்து ஆய்ந்து அறிக்கை அளிப்போம்.
    Published by:Arun
    First published: