அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மூவரின் புகைப்படங்களையும் இணைத்து "இளையராஜா நம்மை ஒன்றிணைப்பார்" என மதுரை பாஜகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் வெளியிட்டிருந்த `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய முன்னுரையில், "மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டவர்கள்'' என குறிப்பிட்டிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அரசியல், சினிமா வட்டாரங்களில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், அண்ணல் அம்பேத்கர், இளையராஜா, பிரதமர் மோடி ஆகியோரை இணைத்து மதுரை மாநகர் பாஜகவினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
Also read... திமுக வந்தாலே மின்வெட்டுதான்.. தலைமை மாறினாலும் நிலைமை மாறவில்லை - டிடிவி தினகரன் விமர்சனம்
அதில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் பிரதமர் மோடியின் கரங்களை பிடித்து இருவரையும் இளையராஜா இணைப்பது போல் வடிவமைத்து உள்ளனர்.மேலும், "மதம், சாதி, மொழி கடந்து இசை நம்மை ஒன்றிணைக்கும். இசைஞானி இளையராஜாவும் கூட..." எனும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Ilaiyaraja, Madurai