முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி ஊற்றிய இலங்கை கடற்படை - நீதிமன்றம் கண்டனம்

மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி ஊற்றிய இலங்கை கடற்படை - நீதிமன்றம் கண்டனம்

கைது செய்யப்பட்ட மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் மீட்க வேண்டும் எனவும் அவர்களது வீடுகளிலும் பொங்கல் பொங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் மீட்க வேண்டும் எனவும் அவர்களது வீடுகளிலும் பொங்கல் பொங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்

கைது செய்யப்பட்ட மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் மீட்க வேண்டும் எனவும் அவர்களது வீடுகளிலும் பொங்கல் பொங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்

  • Last Updated :

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது பூச்சி மருந்து தெளிப்பது போல் உடல் முழுவதும் கிருமி நாசினியை ஊற்றியது மனிதாபிமானமற்ற செயல் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தமிழக மீனவர்களை மீட்க இந்தியா - இலங்கை தூதரக அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கூறப்பட்டிருந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இலங்கை கடற்படை. தமிழக மீனவர்களை தீவிரவாதிகள் போல் நடத்துவதாக குற்றம்சாட்டினார்.  இதனைகேட்ட நீதிபதிகள், மீனவர்களை கொரோனா பரிசோதனை பரிசோதனை செய்யாமல், ஒரு பூச்சி மருந்து தெளிப்பது போல் அவர்கள் மீது கிருமி நாசினியை ஊற்றியது மனிதாபிமானற்ற செயல் என குறிப்பிட்டார். கைது செய்யப்பட்ட மீனவர்களை பொங்கல் பண்டிகைக்குள் மீட்க வேண்டும் எனவும் அவர்களது வீடுகளிலும் பொங்கல் பொங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Also Read : சென்னையில் பெய்த பேய் மழைக்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

top videos

    மேலும் மீனவர்கள் கைது செய்யப்பட்ட இடம் எந்த இடம் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். பின்னர் வழக்கின் விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக கூறிய நீதிபதிகள், அதற்குள் மீனவர்கள் மீட்கப்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தனர்.

    First published:

    Tags: Fishermen, Madurai