Home /News /tamil-nadu /

பிரேசில் ஒலிம்பிக் - மதுரை மாணவி தங்கம் வென்று சாதனை

பிரேசில் ஒலிம்பிக் - மதுரை மாணவி தங்கம் வென்று சாதனை

மதுரை மாணவி தங்கம் வென்று சாதனை

மதுரை மாணவி தங்கம் வென்று சாதனை

கடந்த மே 1-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை  பிரேசிலில் நடைபெற்று வரும் காது கேளாதோர்  ஒலிம்பிக் போட்டியில் மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகா பங்கேற்றார்.

  • News18
  • Last Updated :
பிரேசிலில் நடைபெற்று வரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் மதுரையை சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த மே 1-ம் தேதி முதல் வரும் 15-ம் தேதி வரை  பிரேசிலில் நடைபெற்று வரும் காது கேளாதோர்  ஒலிம்பிக் போட்டியில் மதுரை மாநகராட்சி அவ்வை பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெர்லின் அனிகா பங்கேற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த வீராங்கனையை 21-18,  21-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று ஜெர்லின் அனிகா தங்கம் வென்றுள்ளார்.



அதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அபினவ் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஜெர்லின் அனிகா மலேசியா நாட்டை சேர்ந்த கலப்பு இரட்டையர் ஜோடியை 21-14, 21-8 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி  பெற்று தங்கம் வென்றுள்ளனர்.



Also read : லவ்லினா அபாரம்: மகளிர் உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி, அறிமுகத்திலேயே பிரகாசித்த நீத்து

இந்தியாவிற்காக விளையாடி 2 தங்கப் பதக்கத்தை வென்றுள்ள  மதுரையை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Brazil, Madurai

அடுத்த செய்தி