மதுரை ஆவினில் பணி நியமனத்தில் முறைகேடுகள் குறித்து ஆவின் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 2019 - 20 ஆம் ஆண்டுகளில் மதுரை ஆவினில் 61 நியமனங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை நேர்காணலுக்கு அழைக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக ஏற்கனவே நிர்வாக இயக்குனர் சுப்பையன் உத்தரவின் பேரில் தணிக்கைபிரிவு சேர்ந்த இணை இயக்குனர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தி வந்தனர். அதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது மீண்டும் தணிக்கை குழுவினர் தங்களுடைய விசாரணையை துவக்கி உள்ள நிலையில் ஆவின் விஜிலன்ஸ் பிரிவிற்கு ஏற்கனவே வந்த பல்வேறு புகார்கள் தொடர்பாகவும் தற்போது ஆவின் விஜிலன்ஸ் அதிகாரிகள் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2019ஆம் ஆண்டு தீபாவளியின் போது சிறந்த முகவர்கள் 200 பேருக்கு சுமார் 5,000 மதிப்பிலான பேக் பரிசாக வழங்கப்பட்டது. இதற்காக பத்து லட்ச ரூபாய் செலவழிக்க பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பேக் வழங்கியதாக புகார் எழுந்துள்ளது.
அதேபோன்று 2019ஆம் ஆண்டு தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அதிகாரிகள் ஒப்புதல் இல்லாமல் விளம்பரம் வழங்கப்பட்டது. இதற்கு 20 லட்ச ரூபாய் கணக்கு காட்டப்பட்டு உள்ளதாகவும் இவற்றின் உண்மைத் தன்மை குறித்தும் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்பு உள்ளதா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.