மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் விழா ஏப்ரல் 16ஆம் தேதியான இன்று அதிகாலை நடைபெற்றது. ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இன்று காலை அழகர் இறங்கினர்.
வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்விற்காக கடந்த 11ம் தேதி வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கபப்ட்ட நிலையில், அதிகளவு தண்ணீர் செல்வதால் பக்தர்கள் வைகை ஆற்றில் இறங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இன்று நடைபெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழ்ந்தனர்.
இதையும் படிக்க: நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை குறிவைத்து கொள்ளை.. சேசிங் கொள்ளையர்கள் இருவர் கைது
கூட்ட நெரிசல் காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் காயம் ஏற்பட்டு மொத்தம் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண், 60 வயது மதிக்கத்தக்க பெண் என 2 நபர் உயிரிழந்தனர். மீதமுள்ள 9 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ளது இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக ‘ மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் -9498042434 - என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.