• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரை ஆதீனம் கவலைக்கிடம்.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மதுரை ஆதீனம் கவலைக்கிடம்.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மதுரை ஆதீனம் கவலைக்கிடம்: அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மதுரை ஆதீனம் கவலைக்கிடம்: அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மதுரை ஆதீனத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

  • Share this:
    மதுரை ஆதின மடத்தின் 292வது குருமகா சன்னிதான பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77) இருந்து வருகிறார்.

    இவர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், இன்று காலை முதல் அவரது உடல்நிலை கவலைக்கடமானதாக உள்ளது. தொடர்ந்து, ஐசியூ பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதைத்தொடர்ந்து, அவர் விரைவில் நலம்பெற பக்தர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: