• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆணி படுக்கையில் 15 மணி நேரம் வாள் சுழற்றிய சிறுவன்.. கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாணவர்!

ஆணி படுக்கையில் 15 மணி நேரம் வாள் சுழற்றிய சிறுவன்.. கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாணவர்!

கிருத்தீஷ்

கிருத்தீஷ்

இந்த சாதனைக்காக தினமும் 4 மணி நேரம் ஆணி படுக்கை மீது நின்று வாள் சுழற்றி பயிற்சி மேற்கொண்டுள்ளார்

  • Share this:
மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 வயது மாணவர் ஒருவர் 15 மணி நேரம் ஆணி படுக்கையில் நின்று வாள் சுழற்றி சாதனை படைத்துள்ளார்.

மதுரை கோசாகுளத்தை சேர்ந்த 15 வயது மாணவர் கிருத்தீஷ், கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சிலம்பம், வாள் சண்டை, மான் கொம்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால், தினமும் காலை, மாலை என இரு வேளை செய்த கடின பயிற்சியின் மூலமாக சிலம்ப உத்திகளில் தேர்ந்தார்.

கடந்த 2020 ஜனவரி 2 ஆம் தேதி, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.அதனை தொடர்ந்து, நேற்று (ஆக.27) மாலை 5:45 மணி முதல் இன்று (ஆக.28) காலை 8:45 மணி வரை தொடர்ச்சியாக 15 மணி நேரம் வாள் சுழற்றி சாதனை படைத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், 12 ஆயிரத்து 800 ஆணிகள் கொண்ட ஆணி படுக்கை மீது நின்று கிருத்தீஷ் படைத்த இந்த சாதனைகள் சோழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சாதனைக்காக தினமும் 4 மணி நேரம் ஆணி படுக்கை மீது நின்று வாள் சுழற்றி பயிற்சி மேற்கொண்ட கிருத்தீஷ், நேற்று தொடர்ச்சியாக 15 மணி நேரம் நின்றதாலும், தூக்கம், உணவு இன்றி சாதனை மேற்கொண்டதாலும் நடுவில் ஒரே ஒரு முறை 10 நிமிடம் மட்டும் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். பின்னர், அந்த 10 நிமிடத்தையும் கடைசியில் சமன் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சாதனைக்கு பின்னர் அவரது கால் பாதங்களில், ஆணிகளால் ஏற்பட்ட அழுத்தத்தால் கடும் கால் வலி ஏற்பட்டுள்ளது. இருந்தும், இதை விட மேலான ஒரு சாதனையை செய்ய வேண்டும் என உறுதி பூண்டுள்ளார். அடுத்து வேறொரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 15 மணி நேரம் ஆணி படுக்கை மீது நின்று ஸ்கிப்பிங் செய்து சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார்.

"கின்னஸ் சாதனை முயற்சிக்கு அதிக செலவாகும் என்பதால், சோழன் சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சி எடுத்துள்ளதாகவும், மாணவன் கிருத்தீஷின் இந்த முயற்சியின் மூலம் தடுப்பூசி செலுத்துவதில் மக்கள் ஆர்வம் செலுத்த வேண்டும்" என அவரது பயிற்சியாளர் சண்முகவேல் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: