எல்லையைக் கடந்த காதல்- இங்கிலாந்துப் பெண்ணை திருமணம் செய்த மதுரை இளைஞர்
எல்லையைக் கடந்த காதல்- இங்கிலாந்துப் பெண்ணை திருமணம் செய்த மதுரை இளைஞர்
Sam David Livingston Sarah
கிராமப்புற பகுதி மிகவும் அழகானதாக உள்ளதாகவும், இங்குள்ள கலாச்சாரம், உடைகள் மற்றும் உணவு முறைகளான அரிசி சாதம், சப்பாத்தி, சிக்கன் பிரியாணி என இந்திய உணவு வகைகள் அனைத்தும் அருமை என சாரா எலிசபெத் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் - ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற ஆக்குபேஸன்ட் தரபிஸ்ட் -யை கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ் நாடு திரும்பியுள்ள இந்த இளம் ஜோடிக்கு நேற்று உசிலம்பட்டியில் உள்ள ஏஜி சர்ச் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் இந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி மணமக்கள் இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து கணவரின் உறவினர்கள் மற்றும் இங்கு உள்ள மக்கள் அன்பு செலுத்துவது மிகவும் பிடித்து போனதாகவும், கிராமப்புற பகுதி மிகவும் அழகானதாக உள்ளதாகவும், இங்குள்ள கலாச்சாரம், உடைகள் மற்றும் உணவு முறைகளான அரிசி சாதம், சப்பாதி, சிக்கன் பிரியாணி என இந்திய உணவு வகைகள் அனைத்தும் அருமை என சாரா எலிசபெத் தெரிவித்தார்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.