• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் தடுப்பூசி போடுவதற்கு ஒரேநேரத்தில் பெரும் கூட்டமாக குவிந்த மக்கள்!

மதுரையில் தடுப்பூசி போடுவதற்கு ஒரேநேரத்தில் பெரும் கூட்டமாக குவிந்த மக்கள்!

தடுப்பூசி போட கூடிய மக்கள் கூட்டம்

தடுப்பூசி போட கூடிய மக்கள் கூட்டம்

கொரோனா தடுப்பூசி 200 பேருக்கு மட்டுமே இருந்ததால், தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக வந்தமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  • Share this:
    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தனியார் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முகாம் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கூடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி வருகிற ஜூன் 7ம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று திருமங்கலம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள திருமங்கலம் நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதன் அறிவிப்பு திருமங்கலம் நகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருமங்கலம் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் சமூக இடைவெளி இன்றி கூடியதால் கொரோனா பரவும் அபாய நிலை ஏற்பட்டது.

    மேலும் 200 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி இருந்ததால் மீதம் இருந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமூக இடைவெளி இன்றி வெயிலில் காத்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடி இருந்ததால் காவல்துறையினர் தடுப்பூசி இல்லை என்று கூறி, அவர்களை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் பொதுமக்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: