பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசனும் முட்டாள் தான்: எச்.ராஜா விமர்சனம்

எச்.ராஜா

பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசனும் முட்டாள்தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். 

 • Share this:
  பெரியாரை பின்பற்றுவதால் கமல்ஹாசனும் முட்டாள் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்காணூரணியில் நடைபெற்ற மலிவு விலை மக்கள் மருந்தகம் திறப்பு விழாவில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு மருந்தகத்தை திறந்துவைத்தார்.

  பின்னர் விழாவில் அவர் சிறப்புரையாற்றியதாவது, தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது என சுகாதாரத்துறை தெரிவிக்கவில்லை, ஆனால் மற்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கும் போது கொடுத்து உதவலாமா வேண்டாமா?என்று கேள்வி எழுப்பினார்.

  எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என தமிழை அழித்த கும்பல் இன்று தமிழைப்பற்றி பேசுகிறது. நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும் மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் தான். கண்டெய்னர் மொபைல் டாய்லைட் என எதைக் கண்டாலும் பயப்படுகிறார், இவர் உலக நாயகனா?

  ஸ்டாலின் முட்டாள் என தெரியும் அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்கு முட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது என கூறினார்.

  இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர்,
  ஸ்டெர்லைட் ஆலையில் காப்பர் தயாரிக்கலாமா, திறக்கலாமா என்பதை கோர்ட் முடிவெடுக்கட்டும். ஆனால் ஆயிரம் டன் ஆக்ஸிஜன் கொள்ளளவு உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை தற்போது அத்தியாவசிய தேவை இருக்கும் போது அதை திறக்க எந்த ஆட்சபனையும் செய்ய வேண்டாம் என்று அவர் கூறினார்.

  செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: