மதுரையில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் வருகை தந்தார்.
அப்போது மதுரை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கிராம பஞ்சாயத்து மக்கள் நீதி மய்யம் கண்டுபிடித்தது அல்ல. 25 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் மக்களுக்கு தெரியாத விஷயத்தை டார்ச் லைட் அடித்து காட்டியுள்ளது.
மக்கள் அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்து விட்டால் வியாபாரம் கெட்டுவிடும் என்ற பயத்தினாலேயே அதை செய்யாமல் இருந்தனர்.
அடுத்ததாக நகர்ப்புற வார்டு சபைகளை அமைக்க வேண்டும் என்பதனையும் முதல் குரலாக வைத்துக் கொண்டிருக்கிறோம்.
குடிநீர் என்பது அத்தியாவசியம். இன்னும் 25 ஆண்டுகள் கடந்தால் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் ஆகிவிடும், ஆனால் இன்னும் குடிநீர் முழுமையாக கிடைக்கவில்லை என்றார்.
எது இலவசமாக கிடைக்கிறதோ அதை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கு இலவசமாக ஓடுவது சாக்கடை மட்டுமே. எல்லா இடங்களிலும் ஓடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமங்களும் மாற வேண்டும். மக்கள் மாற்றங்களின் பேச்சாளர்களாக இல்லாமல் போராளிகளாக மாற வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தெரிவித்ததால் ஸ்டாலினுக்கு அடிவயிறு கலங்குகிறது - ஆர்.பி.உதயகுமார்
இதற்காக மக்களின் குரல் கேட்க வேண்டும். நடுநிலையாளர்கள் ஆக மக்கள் மாற வேண்டும். அரசியலில் வயது, முன் அனுபவம் இன்மை உள்ளிட்டவை இடையூறாக இருந்தது. அந்த அனுபவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. மக்களின் ஆதரவு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளது. இன்றும் மாற்றத்திற்காக நாங்கள் முன் வருவது போல் மக்களும் ஒரு அடி முன் வைக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.