• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் பிரமாண்டமாக அமையும் கருணாநிதி நூலகம்: செலவீனம் குறித்து அரசாணை வெளியீடு

மதுரையில் பிரமாண்டமாக அமையும் கருணாநிதி நூலகம்: செலவீனம் குறித்து அரசாணை வெளியீடு

கலைஞர் நினைவு நூலகம்

கலைஞர் நினைவு நூலகம்

மதுரை புது நத்தம் பகுதியில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் சுமார் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் கலைஞர்  நினைவு நூலகம் அமைய உள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில் கலைஞர்  நினைவு நூலகம் மதுரையில் அமைக்கப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு ஆகும் செலவு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    கருணாநிதியின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் கலைஞருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும்  நன்கு அறிவோம்.

    இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர்  அண்ணாவின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில்,  ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா  நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரியவாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், கருணாநிதி பெயரில் சர்வதேச தரத்திலான நவீன பொது நூலக கட்டடம் கட்ட பொதுப்பணித் துறையின் விரிவான திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில், ரூ.99 கோடி மதிப்பீட்டில் நூலகம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியும், நூலகத்திற்கு தேவையான நூல்கள், மின்நூல்கள், இணைய வழி பருவ இதழ்கள் மற்றும் ஆராய்ச்சி இதழ்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ.10 கோடியும், தொழில்நுட்ப சாதனங்கள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5 கோடியும் என மொத்த செலவினத் தொகை ரூ.114 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வாடகைக்கு விடப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி: திமுக பேரூர் கழக செயலாளர் மீது கட்சி பிரமுகர் புகார்


    மதுரையில் புது நத்தம் ரோட்டில் அமைந்துள்ள பொதுப்பணித் துறை குடியிருப்பு வளாகத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் அமையவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: