Home /News /tamil-nadu /

அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படம்: விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்

அம்மா உணவகத்தில் கருணாநிதி புகைப்படம்: விசாரணை நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தகவல்

அம்மா உணவகம்

அம்மா உணவகம்

அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. திமுகவினர் இந்த் படத்தை வைத்துள்ளனர் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் இடம்பெற்றது தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2013-ம் ஆண்டு முதல் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன.
    காலை இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் மற்றும் கறிவேப்பிலை சாதம் போன்றவை மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

    மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அம்மா உணவகம் திமுக ஆட்சி அமைந்தும் தொடருமா என்ற கேள்வி எழுந்தது. சென்னையில் சிலர் அம்மா உணவகம் தாக்கப்பட்டு சர்ச்சையான பின்னர், முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் என தெரிவித்திருந்தார்.

    மதுரை மாநகராட்சியில் 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன.  இதில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில்  2015 மே 24 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. அம்மா உணவகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஊழியர்களை திடீர் பணி நீக்கம் செய்து விட்டு திமுக பிரமுகர்களுக்கு நெருங்கிய நபர்களை பணியமர்த்தி உள்ளதாக புகார்களும் எழுந்தன. இந்நிலையில், இந்த உணவகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தோடு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி படமும் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அம்மா உணவக பெயர் பலகையில் கலைஞர் கருணாநிதி படம்!


    இது தொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை நியூஸ் 18 தமிழ் ஊடகம் சார்பில்  தொடர்புகொண்டு கேட்டப்போது,  அம்மா உணவகத்தில் கருணாநிதி படத்தை திமுக கட்சி பிரமுகர்கள் வைத்துள்ளார்கள். கருணாநிதி படத்தை வைப்பது தொடர்பாக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எங்களுக்கு தகவல் இல்லை. உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் படிங்க: திருத்தணி முருகன் கோவிலில் சிசிடிவி கேமராவை மறைத்த அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு

    Published by:Murugesh M
    First published:

    Tags: Amma Unavagam, DMK Karunanidhi, Madurai

    அடுத்த செய்தி