நடிகர் சூரி வீட்டு திருமணத்தில் திருடுபோன நகைகள்..

நடிகர் சூரி

நடிகர் சூரி வீட்டு திருடுபோன நகைகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நடைபெற்ற நடிகர் சூரியின் உறவினர் திருமண விழாவில் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை திருடு போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

  நடிகர் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகள் திருமண விழா கடந்த 9ம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. சூரி முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.  நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

  திருமண விழாவுக்கு திரை பிரபலங்கள் வந்ததால்  மணமகள் அறையில் இருந்த உறவினர்கள் அனைவரும் மணமேடைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன்மாலை, 3 சவரன் தங்க நெக்லஸ், 2 சவரன் கை செயினை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சூரியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரையடுத்து  கீரைத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமண மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துள்ளனர். மணமகன் அறையில் இருந்தவர்கள், அறைக்கு வந்து சென்றவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Ramprasath H
  First published: