மதுரையில் கடன் சுமையால் 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நகை தொழிலாளி தற்கொலை!

நகைத் தொழிலாளி

சரவணன் உசிலம்பட்டியில் நகை பட்டறை தொழில் செய்து வந்தார். தொழில் ரீதியாக பல்வேறு கடன் சுமையால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார்.

 • Share this:
  மதுரை உசிலம்பட்டியில் கடன் சுமையால் 3 குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நகை தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் வசித்து வந்தவர்  சரவணன் (37). இவரது மனைவி ஸ்ரீநிதி பூங்கோதை (37) .  இவர்களது மூத்த மகள் மகாலட்சுமி (10),  இரண்டாவது மகள் அபிராமி (5 ), இளைய மகன் அமுதன் ( 5 ). இருவரும் இரட்டை குழந்தைகள்.  இவர்கள்  5 பேரும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சரவணன் உசிலம்பட்டியில் நகை பட்டறை தொழில் செய்து வந்தார். தொழில் ரீதியாக பல்வேறு கடன் சுமையால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார்.

  இந்த நிலையில் இன்று காலை (செவ்வாய்கிழமை)  10 மணிவரை சரவணன் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனை பார்த்த  அக்கம் பக்கத்தினர் உடனடியாக உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, வீட்டை உடைத்து பார்த்த போது, 2 மகள்கள், ஒரு மகன் மற்றும் கணவன், மனைவி என 5 பேரும் ஆங்காங்கே வீட்டில் சடலமாக கிடந்தனர்.  இது காண்போரை கண் கலங்க வைத்தது.

  இதையடுத்து, போலீசார், அவர்கள் 5 பேரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உசிலம்பட்டி போலீசார் ராஜன் தலைமையில் போலீசார் எதற்காக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர்.  என்ன காரணம்?  என விசாரணை மேற்கொண்டனர்.

  முதல்கட்ட விசாரணையில், கடன் சுமையால் குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

  செய்தியாளர் - கருணாகரன்
  Published by:Esakki Raja
  First published: