• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Madurai Malli : புதிய கட்டுப்பாடுகளால் குப்பைக்கு போகும் மதுரை மல்லி... பெரும் வேதனையில் விவசாயிகள்

Madurai Malli : புதிய கட்டுப்பாடுகளால் குப்பைக்கு போகும் மதுரை மல்லி... பெரும் வேதனையில் விவசாயிகள்

குப்பைக்கு போகும் மதுரை மல்லி

குப்பைக்கு போகும் மதுரை மல்லி

மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் மல்லிகை, பிச்சி பூ, முல்லை பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். வாசனை திரவிய ஆலைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    திருமங்கலம் மற்றும் மதுரை சுற்றுவட்டார பகுதியில் 30,000 முதல் 40,000 விவசாயிகள் மல்லிகைப், முல்லைப்பூ, பிச்சி பூ ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தண்ணீரின் பற்றாக்குறையால் மல்லிகை பூக்கள் அதிகம் பயிரிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    திருமங்கலம் அருகே உள்ள அரசபட்டி வலையங்குளம், தூம்பக்குளம் கப்பலூர,  திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதி என பல்வேறு பகுதிகளில்  10,000  ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை பூ, பிச்சிப் பூ முல்லைப் பூக்களை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை மார்க்கெட்டில் விலை போகிறது என்றும் தற்போது சுபநிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களில் திருவிழா நடைபெறவில்லை. இதனால் தோட்டங்களில் பூப்பறிக்கும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 50 வரை கூலி வழங்கப்படுகிறது. பூக்களின் விலை வீழ்ச்சியால் கூலி கொடுக்க முடியாத நிலையில் தோட்டத்தில் உள்ள செடிகளிலேயே பூக்கள் பறிக்க படாமல் மலர்ந்து உதிர்ந்து விடுகிறது.

    ஏக்கருக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து வரும் விவசாயிகள் கடனாளியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால் பெரும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் வேறு வழியின்றி பூக்களை பறித்து கமிஷன் கடைகளுக்கு கொண்டு வந்தால் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விலைக்கு எடுக்கப்படுகிறது. மேலும் வாசனை திரவிய ஆலைகளுக்கு அளவுக்கதிகமான அளவிற்கு பூக்கள் வருவதால் மல்லிகைப் பூக்களை எடுக்க மறுக்கின்றனர் ஆதலால் பறிக்கப்பட்ட பூக்களும் குப்பைகளில் கொட்டப்படுகின்றன.

    தமிழக அரசு அறிவித்த நேர கட்டுப்பட்டால் பொதுமக்களும் பூக்கள் வாங்க வருவதில்லை. கூடுதலாக 2 மணி நேரம் அதிகரிக்க வேண்டுமென வியாபாரிகளும் விவசாயிகளும் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  ஆனால் நகராட்சி அதிகாரிகள் நேர கட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடமே கோரிக்கை வைக்க முடியும் எனக்கூறி பூ வியாபாரிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.

    மேலும் படிக்க...  MK Stalin : மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு: திருச்சியில் வீடு வீடாக இனிப்பு வழங்கிய திமுகவினர்

    இதனைக் கருத்தில் கொண்டு அரசு பூக்களுக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். மேலும் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மல்லிகை செடி பயிரிட்டு உள்ளதால் இப்பகுதியில் வாசனை திரவிய ஆலை அமைந்தால் பூக்களுக்கு விலை நிர்ணயம் கிடைக்கும் எனவும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    செய்தியாளர்: சிவக்குமார், திருமங்கலம்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: