தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த மூன்று பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. இரண்டாண்டு ஜல்லிக்கட்டு தடைக்குப் பிறகு 2017-ம் ஆண்டு முதல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு இருந்துவருகின்றன. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வருகை தந்தார்.
அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் பரிசு பெற்றவர்களின் விவரம்!
கடந்த ஆண்டு பொங்கலின் போது கொரோனா பாதிப்பு இருந்தாலும், கொரோனா இறங்கு முகமாக இருந்தது. அதனால், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுடன் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 650 காளைகள் சீறிப் பாய்ந்தன. 24 மாடுகளை அடக்கி முதல் இடத்தைப் பிடித்தவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் வந்தவருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது.
காலை 7.30 மணிக்கு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் பார்க்க முடியவில்லை என்று வருத்தம் இருப்பவர்கள் தொலைக்காட்சி வாயிலாக நேரலையில் கண்டுகளிக்கலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியிலும், நியூஸ்18 தமிழ்நாடு ஃபேஸ்புக் பக்கத்திலும் பாலமேடு ஜல்லிக்கட்டு காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.