Home /News /tamil-nadu /

ஜல்லிக்கட்டு: வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது...ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்

ஜல்லிக்கட்டு: வெளியூர் நபர்களுக்கு அனுமதி கிடையாது...ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம்

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது.  வெளியூர், வெளி மாவட்ட நபர்கள் பார்வையாளர்களாக பங்கேற்க அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகள் மற்றும் வீரர்கள் இந்தாண்டு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், வெளியூர் நபர்கள் போட்டியை காண அனுமதி கிடையாது எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதை செயல்படுத்துவது குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி துறை, காவல்துறை, ஜல்லிக்கட்டு விழா குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில்,"ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர் மற்றும் மாடுகள் மற்றொரு போட்டியில் பங்கேற்க முடியாது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் நபர்கள்/மாடுகள் உரிமையாளர் ஆகியோர் அடையாள அட்டை பெறுவதற்கு இ சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டுகளில் இருந்த டோக்கன் விநியோகம் செய்யும் சிக்கல்கள், முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்தாண்டு நேரடியாக டோக்கன் வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது.

    பதிவு செய்யப்படும் மாடுகளின் தகுதியை கால்நடை துறை மருத்துவர்கள் ஆய்வு செய்த பின்னரே அனுமதி அளித்து அடையாள அட்டை வழங்கப்படும். விழா குழுவினர் இரு தரப்பினர் இடையே நீடித்து வந்த சிக்கல்கள் காரணமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை  மாவட்ட நிர்வாகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு - 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.. மாடுபிடி வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்


    இந்த ஆண்டு மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வசதி ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும். ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி" என்றார்.

     

    கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி மாநகராட்சி ஆணையர் தலைமையிலும், பாலமேடு, அலங்காநல்லூர் போட்டிகள் ஆட்சியர் தலைமையிலும் நடைபெறும். ஒரு போட்டியில் பங்கேற்ற வீரர், மாடு மற்றொரு போட்டியில் பங்கேற்க இயலாது.

    நாளை முதல் அடையாள அட்டை விண்ணப்பம் செய்வதற்கான ஆன்லைன் பதிவு செய்யும் வசதி துவங்குகிறது. வெளியூர், வெளி மாவட்ட நபர்கள் பார்வையாளர்களாக பங்கேற்க அனுமதி கிடையாது. டோக்கன் வழங்குவதில் 1 சதவிகிதம் கூட முறைகேடு இருக்காது.

    மேலும் படிங்க: புறநகர் ரயில்களில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம்: பயணிகள் அவதி


    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டி முடிவில் மறுநாள் போட்டிக்கான அடையாள அட்டை சரிபார்ப்பு பணிகள் நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்" என்றார்

    செய்தியாளர்: வெற்றி
    Published by:Murugesh M
    First published:

    Tags: Corona, Jallikattu

    அடுத்த செய்தி