• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்ஸ்டாகிராம் காதலால் வந்த வினை.. சிறுமியை நிர்வாண வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

இன்ஸ்டாகிராம் காதலால் வந்த வினை.. சிறுமியை நிர்வாண வீடியோ எடுத்த காதலன் செய்த விபரீதம்!

instagram love

instagram love

சிறுமியோடு  தனிமையில் இருந்ததை சந்தோஷ்குமார் வீடியோ எடுத்துக் கொண்டதோடு, அதனை வைத்து சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

  • Share this:
    மதுரையில் 17 வயது சிறுமியை இன்ஸ்டாவில் பழகியதோடு காதலிப்பதாக கூறி, பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இரண்டு வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வந்துள்ளார், கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபருடன் அச்சிறுமிக்கு இன்ஸ்டாகிரமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    Also Read  : மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

    தொடக்கத்தில் சாதாரணமாக  சந்தோஷ்குமார் நண்பராக பழகி பேசி வந்த நிலையில், இருவருக்கும் இருந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது, இந்நிலையில் சிறுமியின் வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் இருவரும் பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

    instagram love


    சிறுமியோடு  தனிமையில் இருந்ததை சந்தோஷ்குமார் வீடியோ எடுத்துக் கொண்டதோடு, அதனை வைத்து சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் தனது நண்பர் ராகுல் மூலம் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக கூறி சுமார் 50,000 ரூபாய் வரை பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    Also read:   அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

    இது குறித்து சிறுமியின் தாய் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்புணர்வு  செய்த சந்தோஷ்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த ராகுல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து இருவர் மீதும் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, சிறுமியை மிரட்டியது, பணம் பறித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இப்போதெல்லாம் ஆன்லைன் வகுப்புகளுக்காக வேறு வழியில்லாமல் சிறுவர்களிடம் மொபைல் போன்கள் கொடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. இருப்பினும் அவர்களை பெற்றோர் கவனித்து, கண்காணிப்பில் வைத்தால் மட்டுமே இது போன்ற விபரீதங்கள் ஏற்படாமல் ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.

    வெங்கடேஷ்வரன் , செய்தியாளர் - மதுரை 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: