Home /News /tamil-nadu /

மதுரையில் வீட்டிற்கே காய்கறிகள்: ரூ.100-க்கு 10 வகையான காய்கறி தொகுப்பு விநியோகம்!

மதுரையில் வீட்டிற்கே காய்கறிகள்: ரூ.100-க்கு 10 வகையான காய்கறி தொகுப்பு விநியோகம்!

காய்கறி தொகுப்பு

காய்கறி தொகுப்பு

வெளியில் போகாமல் மாநகராட்சியே காய்கறிகளை மிக குறைந்த விலையில் வழங்குவது  உபயோகமாக உள்ளது என்றும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள் தெரிவித்தனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
மதுரையில் வீடுகளுக்கே நேரில் சென்று 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு  விற்பனை செய்யும் பணிகள் துவங்கி உள்ளது.

மதுரை மாநகராட்சி சார்பில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மாநகராட்சியின் 100 வார்டுகளில் 125 வாகனங்களில் நடமாடும் வாகனங்கள் விற்பனை தொடங்கியது.  ஒரு பையில் கத்திரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், தக்காளி, தேங்காய், அவரைக்காய், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா என 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு வார்டு வாரியாகச் சென்று  வழங்கப்படுகிறது.

பணிகளைப் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறும்போது, தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி முதற்கட்டமாக 125 வாகனங்களில் மாநகராட்சி பகுதிகளில்  வசிக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி அனைத்து பொருட்களும் கிடைக்கும் விதமாக, தன்னார்வலர்கள் உதவியுடன் நடக்கும் பணியில்  உழவர் சந்தை , பரவை காய்கறி வியாபாரிகள் சங்கம் , மாட்டுத்தாவணி காய்கறி, பழங்கள் வியாபாரிகள் சங்கம், தோட்டக்கலைத் துறை, பலசரக்கு வணிகர்கள், ஆட்டுக்கறி, கோழிக்கறி விற்பனையாளர் சங்கத்தினர் என 11 அமைப்பின் சார்பில்  அனைத்து பொருட்களையும் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.



Also read... புதுக்கோட்டையில் குரங்குகளின் பசி, தாகத்தைப் போக்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!

வழக்கறிஞர்கள் சங்கத்தினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர், வா நண்பா உள்ளிட்ட தன்னார்வலர்கள் உதவிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  தன்னார்வ வழக்கறிஞர் குமார் கூறும் போது, லாப நோக்கின்றி செய்வதால் மதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு காய்கறி விற்பனை மூலம்  நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் மாநகராட்சி சார்பில் பரவை மார்க்கெட்டில் கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்கிறோம் என்றும், ஒரு வாகனத்திற்கு இருவர் மற்றும் ஓட்டுநர் என மூன்று பேர் செல்வதாக கூறினார்.

வெளியில் போகாமல் மாநகராட்சியே காய்கறிகளை மிக குறைந்த விலையில் வழங்குவது  உபயோகமாக உள்ளது என்றும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று காய்கறிகள் வாங்கிய பொதுமக்கள் தெரிவித்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai corporation

அடுத்த செய்தி