ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் 389 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர்!

மதுரையில் 389 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர்!

கொரோனா பாதித்து பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விபரங்களை சேகரிக்குமாறு அரசு அறிவுறுத்திய நிலையில், குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் அது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் 8 குழந்தைகள் இரண்டு பெற்றோர்களையும், 381 குழந்தைகள் ஒரு பெற்றோரையும் இழந்துள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதித்து பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் விபரங்களை சேகரிக்குமாறு அரசு அறிவுறுத்திய நிலையில், குழந்தைகள் நல அமைப்பு குழுவினர் அது குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, இதுவரை மதுரை மாவட்டத்தில் 389 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்தவர்கள் என்பதும், அதில் நகர்ப்புறத்தை சேர்ந்த குழந்தைகள் அதிகம் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களில், 8 குழந்தைகள் இரண்டு பெற்றோர்களையும் இழந்தவர்கள். 49 குழந்தைகளின் பெற்றோர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குழந்தைகளில், 1 வயதுக்கு கீழ் 5 நபரும், 10 வயதுக்கு கீழ் 30% நபரும், 11-18 வயதுள்ளோர் 70% நபரும் உள்ளனர். இவர்கள் அனைவரின் விபரங்களையும் குழந்தை நல அமைப்பினர் சேகரித்து, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் மூலம் அவர்களின் தகவல்களை உறுதி செய்து அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுவரை, இரண்டு பெற்றோர்களையும் இழந்த 1 குழந்தைக்கு 5 லட்சம் ரூபாயும், ஒரு பெற்றோரை இழந்த 14 குழந்தைகளுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் நிவாரணம் வந்துள்ளது. மேலும், 179 பேரின் தகவல்கள் உறுதி செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றும், மற்றவர்களின் தகவல்களும் உறுதி செய்யப்பட்டு விரைவில் அவர்களுக்கு நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் நல அமைப்பு குழு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Also read... கொடநாடு என்பது ஒரு மர்மம்; நடந்த விஷயங்கள் எல்லாமே மர்மமாக தான் உள்ளது - கார்த்தி சிதம்பரம் எம்.பி

இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசின் பி.எம்.கேர் சார்பில் தலா 10 லட்சம் ரூபாய் மற்றும் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு தொகையும் அரசு வழங்கும். 1 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாநில அரசு தலா 5 லட்சம் ரூபாயும், காப்பகங்கள் மூலம் அவர்களுக்கான கல்வி, உணவு கிடைப்பதை உறுதி செய்யும். அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும், அரசு வேலை உள்ளிட்டவற்றை அரசுகள் வழங்கும்.

First published:

Tags: Corona, Corona death, Madurai