மதுரையை சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றமைக்காக ரேவதி பயின்ற கல்லூரியான லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் ரேவதி மற்றும் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
லேடி டோக் கல்லூரி சார்பில் ரேவதி மற்றும் அவரது பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு தலா 1 இலட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் கண்ணனுக்கு வழங்கப்பட்ட 1 இலட்ச ரூபாய் பரிசை ரேவதிக்கே வழங்கினார்.
பின்னர் விழாவில் லேடி டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் பேசுகையில் "ரேவதியால் இன்னும் நிறைய பெண்கள் சாதனை நிகழ்த்துவார்கள். ரேவதியின் சாதனையால் கல்லூரி பெருமை கொள்கிறது. விளையாட்டு போட்டியில் பங்கேற்றுக்கும் பெண்களுக்கு ரேவதி முன் உதாரணமாக திகழ்கிறார். கடின உழைப்பால் ரேவதி உச்சத்தை தொட்டு உள்ளார்" என பேசினார்.
Also read: அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், "தாய், தந்தையை இழந்தாலும் சாதனையை செய்திருக்கிறார் ரேவதி. ரேவதி இந்தியாவுக்கு முன் மாதிரியாக உருவெடுத்துள்ளார். ரேவதியின் சாதனைக்கு அவரது பாட்டி ஆரம்மாளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கிராமத்தில் பிறந்து நாட்டுக்கே பெருமை தேடி தந்துள்ளார் ரேவதி. ரேவதியின் சாதனைகளை பார்த்து பல ரேவதிகள் உருவாக வேண்டும். ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆகும் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வாங்குவார்" என பேசினார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் "ரேவதியின் மிகப்பெரிய பங்களிப்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு இளைஞர்களுக்கு அவர் நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ரேவதி தான் தொடங்கிய இடத்திலிருந்து இன்று அடைந்திருக்க உச்சம் என்பது அசாதாரணமானது.
நம்மைப் போல மிக பெரிய மக்கள் தொகை உள்ள நாட்டில் மிக சிலரே இது இதுபோல விளையாட்டுத்துறையில் உச்சம் தொடுவது என்பது நமது சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு இல்லை, ஆனால் நல்வாய்ப்பாக தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நமது முதல்வர் முந்தைய அரசாங்கங்களை விட ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு அதிகமான நிதி உதவி, பரிசுகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளார். தொடர்ந்து நமது இளைஞர்கள் தங்களின் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும் அளவிற்கு நாம் பணியாற்ற வேண்டும்" என பேசினார்.
ஒலிம்பிக் வீராங்கனை ரேவதி பேசுகையில் "கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பால் நான் முன்னேறி வந்துள்ளேன். பள்ளி படிப்புடன் படிப்பை கைவிடும் சூழலில் இருந்தேன். பயிற்சியாளர் கண்ணனால் நான் கல்லூரி படிக்க முடிந்தது. அனைவரின் வேண்டுதலால் நான் ஒலிம்பிக் போட்டி வரை சென்று உள்ளேன்" என பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.