சாத்தான்குளம் சம்பவம் போன்று, தேனியில் இளைஞர் ஒருவரை போலீசார் சட்டவிரோதமாக அடித்து துன்புறுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது, உடலில் காயம் இருப்பது உறுதியானதால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
தேனி ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அடித்து துன்புறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் ஹென்றி திபேன் அளித்த புகாரை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிசாத் ராஜிடம் மனித உரிமை ஆணைய உறுப்பினர், நீதிபதி ஜெயச்சந்திரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், ‘விசாரணை கைதியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளோம். அவர் உடம்பில் காயங்கள் இருக்கின்றன. மருத்துவர்கள் காயம் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். முழு விசாரணைக்கு பிறகு தான் கூற முடியும்.
Also read... தேனியில் ஒரு 'சாத்தான்குளம்'? - காவல்துறையினர் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார்
ஏற்கனவே, பொதுமக்களிடம் பணிவாக நடந்து கொள்ளுமாறு காவல்துறை உயரதிகாரிகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் நல்ல முறையில் பணிகளை செய்துகொண்டிருக்கின்றனர். ஒரு சில இடங்களில் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வருகின்றன. எனவே, அதை எல்லாம் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு ஆணையம் பார்த்துக்கொள்ளும்’ என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theni