மிளகாய் பொடி தூவி மாமனாரை வெட்டிக் கொல்ல முயன்ற மருமகன்.. பட்டப்பகலில் பயங்கரம்..!

மாமனாரை கொல்ல முயன்ற மருமகன்

மனைவியுடன் சேர்த்துவைக்காததால் ஆத்திரத்தில் இருந்த மருமகன், பட்டப்பகலில் மாமனாரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • Share this:
மதுரையில் குடும்ப தகராறு காரணமாக மாமனாரை நடுரோட்டில் வைத்து மிளகாய் பொடி தூவி கொலை செய்ய முயன்ற மருமகனின் வெறிச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த 45 வயது ராஜபாண்டி என்பவரின் மகள் வளர்மதிக்கும், அனுப்பானடியை சேர்ந்த 25 வயது முத்துமணி என்பவருக்கும் கடந்த 2017 இல் திருமணம் நடைபெற்றுள்ளது. சிறிது காலத்திலேயே மது - கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையான முத்துமணி, வளர்மதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக முத்துமணியுடன் வாழ விருப்பமில்லாமல், வளர்மதி பிரிந்து சென்றுள்ளார்.

Also Read: மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

இருவருக்குமான விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வளர்மதி அரசுப்பணி கிடைத்து தஞ்சாவூரில் வசித்து வருகிறார்.  இருந்தும், வளர்மதியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்து ராஜபாண்டியை வற்புறுத்தியும், பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார் முத்துமணி.

இந்நிலையில், இன்று (ஜூலை 2) காலை 11 மணி அளவில் மதுரை காமராஜர் சாலையில் சந்தைப்பேட்டை அருகே  இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜபாண்டியை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார் முத்துமணி.

Also Read:  டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

மேலும், முத்துமணியுடன் வந்த அவரது நண்பர் விக்னேஷ்வரன் என்பவர் ராஜபாண்டி மீது மிளகாய் பொடியை தூவி தாக்கியுள்ளார். இந்த தாக்குதலால், ராஜபாண்டியின் தலையிலும், இடது முழங்கை மற்றும் இரு உள்ளங்கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்த ராஜபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட முத்துமணியை கைது செய்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published by:Arun
First published: