Home /News /tamil-nadu /

"2021ல் பாஸ் ஆனவர்கள் வேலைக்கு வேண்டாம்": தனியார் வங்கியின் சர்ச்சை விளம்பரம் உணர்த்துவது என்ன?

"2021ல் பாஸ் ஆனவர்கள் வேலைக்கு வேண்டாம்": தனியார் வங்கியின் சர்ச்சை விளம்பரம் உணர்த்துவது என்ன?

hdfc bank

hdfc bank

கொரோனா காலத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள சூழலில் அவர்களை ஒதுக்குவதோ, அவர்களின் கல்வித்தரம் குறைவாக இருக்கிறது என கருதுவதோ தவறான அணுகுமுறை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
மதுரையில் உள்ள தனியார் வங்கியின் நேர்முகத்தேர்வு விளம்பரத்தில் 2021 ஆம் வருடம் பாஸ் ஆன மாணவர்கள் தகுதியில்லை என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வங்கி சார்பில் அதற்கு விளக்கம் அளிக்க மறுக்கப்பட்டுவிட்டது.

மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் வங்கி (ஹெச்.டி.எப்.சி) அதன் கிளை விற்பனை மேலாளர் பணியிடத்திற்கு ஆட்கள் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் அளித்திருந்தது. அதில், "2021 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை (2021 passed out candidates are not eligible) என குறிப்பிட்டிருந்தது.

கொரோனா காலகட்ட சூழல் காரணமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வித்தரத்தின் அடிப்படையில், "2021 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேண்டாம்" என தனியார் நிறுவனங்கள் கருதுகின்றனவோ எனும் ஐயம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் எழுந்ததை தொடர்ந்து அந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு விவாதத்திற்கு உள்ளானது.

HDFC வங்கி விளம்பரம்


இது தொடர்பாக வங்கி தரப்பில், விண்ணப்பித்த நபர்கள் சிலர் கேட்டதற்கு,விளம்பரத்தில் "2021 passed out candidates are 'also' eligible" என குறிப்பிடுவதற்கு பதிலாக "2021 passed out candidates are 'not' eligible" என தவறுதலாக எழுத்துப்பிழை ஏற்பட்டதாகவும், அது உடனே திருத்தப்பட்டு மீண்டும் சரியாக ஒரு விளம்பரம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

Also Read:  குதிரன் சுரங்கப்பாதை: தென்னிந்தியாவின் நீளமான குகைப்பாலம் எப்படி இருக்கு? - ஒரு நேரடி ரிப்போர்ட்!

மேலும், நேற்று (ஜூலை 3) நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றதாகவும், அதில் 2021 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற  மாணவர்களும் பங்கேற்றதாக வங்கி அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

இன்னும் சிலரிடம், 2021 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களிடம் பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் இருக்காது என்பதால் அப்படி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த குழப்பம் தொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டதற்கு, "எங்களுக்கு அந்த விளம்பரம் சம்பந்தமாக எதுவும் தெரியாது. எந்த விளக்கம் வேண்டுமென்றாலும் மும்பையில் உள்ள தலைமையிடத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள்" என பொறுப்பற்ற முறையில் பதிலளித்து முடித்துக் கொண்டார்.

Also Read:  மளிகைக் கடையில் 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் வாங்கி குடித்த சிறுமி திடீர் மரணம்… உடல் முழுதும் நீல நிறமானதால் அதிர்ச்சி!

இந்த விவகாரம் தொடர்பாக எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பேசுகையில்,"கொரோனா கால நெருக்கடிகளால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வாயிலாகவே கல்வி கற்று வருகின்றனர். இதை யாரும் விரும்பி செய்யவில்லை, உலகம் முழுவதுமே இதுதான் சூழல்.

எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்


இந்த கொரோனா காலத்தில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள சூழலில் அவர்களை ஒதுக்குவதோ, அவர்களின் கல்வித்தரம் குறைவாக இருக்கிறது என கருதுவதோ தவறான அணுகுமுறை.இந்த கல்வியாண்டு மாணவர்களின் கல்வித்தரம் குறித்து நகைச்சுவையான மீம்கள் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று அது இந்த தனியார் வங்கியின் விளம்பரம் மூலம் நடைமுறைக்கு வந்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமெனில், பள்ளி, கல்லூரிகளில் கற்பதை விட பணிக்கு செல்லுமிடங்ககளில் தான் அதிகமாக கற்றுக்கொள்வோம். இது தான் உலக நடைமுறையும் கூட. எனவே, இந்த கல்வியாண்டு மாணவர்களை குறைவாக நினைப்பதோ, ஒதுக்குவதோ மிகவும் ஆபத்தானது. இது தொடர கூடாது. மாறாக, இவர்கள் மீது கூடுதல் கரிசனம் காட்டுவது தான் அவர்களின் எதிர்காலத்தின் மீது நாம் அளிக்கும் நம்பிக்கையாக இருக்கும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்த விளம்பரத்தில் இருந்தது எழுத்துப்பிழை மட்டுமே என வங்கி தரப்பில் விளக்கம் அளித்தாலும், இது கொரோனா கால தாக்கத்தின் பொதுவான நிஜ முகம் வெளிப்பட துவங்கியுள்ளதை உணர்த்தும் நிகழ்வாகவே தெரிகிறது என சமூக, பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.இதை தவிர்க்க தேவையான விழிப்புணர்வை தனியார் நிறுவனங்கள் பெற வேண்டும் என்பதே இந்த கொரோனா கால தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Bank, Madurai

அடுத்த செய்தி