ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அரசு திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

அரசாங்கம் திவாலாக உள்ளதால் வரிகளை உயர்த்தியே ஆக வேண்டும் என்றும், தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். வருவாய் இல்லாமல் அரசாங்கம் திவாலாக உள்ளது. எனவே வரியை உயர்த்தியே ஆக வேண்டும்.

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜானுக்கு பொருளாதாரம் தெரியாது. வெள்ளை அறிக்கை சம்பந்தமாக வாய்க்கு வந்தபடி உளறிக்கொண்டு இருக்கிறார்.

Also read: திமுக ஆட்சியை விமர்சிக்கமாட்டோம்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியது: அண்ணாமலை

வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தான் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு என்ன நிலையில் உள்ளது என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கும் தேர்தல் அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை.

110 விதியில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து எனக்கே இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோர்ட்டில் ஆஜராகி சொல்வது போல, வருவாய் பற்றாக்குறை இருந்தது என்று ஒப்புக்கொண்டு விட்டார்.

ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு பார்வை திட்டம் - 2023 நிறைவேறவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பொறுப்பற்ற ஆட்சி நடைபெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசின் நிதி நிலையை மாற்றுவதற்கு, மக்களிடம் கருத்து கேட்டு, நிபுணர்களிடம் விவாதித்து பின்னர் ஒரு திட்டத்தை தீட்டி செயல்படுத்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by:Esakki Raja
First published:

Tags: DMK, Finance minister, Taxi, TN Govt