"என்னை மிஞ்சிய விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுங்க" - செல்லூர் ராஜூ செம கலாய்

செந்தில் பாலாஜி - செல்லூர் ராஜூ

மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது என செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டினார்.

  • Share this:
மின் தடைக்கு காரணம் அணில் என்று புதிய கண்டுபிடிப்பை செய்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “மாணவர் சமுதாயத்தை ஏமாற்றும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறியவர்கள், தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அ.தி.மு.க அரசு கொண்டு வந்த 7.5% உள் ஒதுக்கீடு சிறந்த திட்டம். ஆனால், அதனை இந்த அரசு பொருட்படுத்தவில்லை.அ.தி.மு.க அரசின் பல்வேறு நல்ல திட்டங்கள் தொடருமா என்ற கேள்விகள் மாணவர்களிடம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணில் விவகாரம் குறித்த கேள்விக்கு. "நல்ல வேலை நான் பிழைத்துக் கொண்டேன். தேர்மாகோல் விட்டதற்காக என்னை நவீன விஞ்ஞானி என்று தி.மு.க-வினர் கிண்டல் செய்தார்கள்.இப்போது என்னை மிஞ்சி இப்போது அணிலை கண்டுபிடித்து உள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

 

எங்கள் ஆட்சியில் அணில் எல்லா வெளி நாடுகளுக்கு சென்று விட்டது போல, இந்த ஆட்சியில் தான் அணில் மின் கம்பியில் போகிறது.இந்த கண்டுபிடிப்பை செய்த செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: