Home /News /tamil-nadu /

கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் - மதுரையில் பரபரப்பு

கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் - மதுரையில் பரபரப்பு

தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள்

தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள்

Madurai : மதுரையில் சொத்துக்காக கூலிப்படையை வைத்து தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை தல்லாகுளம் கமலா 2வது தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணாராம்- பங்கஜவள்ளி. இவர்கள் தனது வளர்ப்பு மகளான நிவேதா என்பவருடன் வசித்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நிவேதா - தந்தையுடன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டது.இதனால் நிவேதா தனது கணவருடன் வீட்டை  விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த முதியவர் கிருஷ்ணாராம் மர்ம நபர்களால்  படுகொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கொலை நடந்த வீட்டிற்கு தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ் தலைமையிலான காவல்துறையினர் நேரில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வந்தனர்.

    Must Read : ராஜபக்சே வெளிநாடு செல்ல திட்டம்? விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்

    இந்நிலையில், அவருடைய வளர்ப்பு  மகள் நிவேதிதா மற்றும் அவரது கணவர் ஹரிஹரன் ஆகிய இருவரும் சொத்துக்காக கூலிப்படையை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இது சம்பந்தமாக நிவேதிதா, ஹரிஹரன் உட்பட 4 பேர் கைது செய்யபட்டு, காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - ஹரிகிருஷ்ணன்
    Published by:Suresh V
    First published:

    Tags: Madurai, Murder

    அடுத்த செய்தி