Home /News /tamil-nadu /

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு.. தீயில் கருகி கணவன் மனைவி உயிரிழப்பு

ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு.. தீயில் கருகி கணவன் மனைவி உயிரிழப்பு

தீ விபத்தில் உயிரிழந்த தம்பதி

தீ விபத்தில் உயிரிழந்த தம்பதி

வீட்டு அறையில் உறங்கிகொண்டிருந்த தம்பதியினர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி்நகர் பியர்ல் ரெசிடன்சி 3வது குறுக்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் சக்திகண்ணன். இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு குழந்தைகள்  இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில் மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.

Also Read: அம்பத்தூரில் ரவுடிகள் அட்டகாசம்.. பேக்கரி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி அட்டூழியம்

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடிரென மின் கசிவு ஏற்பட்ட நிலையில் புகை உருவாகியுள்ளது. இதனால் அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்ற நிலையில் தீ பற்றி எரிய தொடங்கியது. இதில் இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்தது . இந்த கோர விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.

Also Read: பரிசு மழையில் வாக்காளர்கள்.. மூக்குத்தி விநியோகித்த திமுக - சாலை மறியலில் இறங்கிய அதிமுக

வீட்டில்  தீ பற்றி எரிந்த நிலையில் சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவம் இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீ அனைத்து இருவரும் உடலையும் மீட்டனர். இதுகுறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு 17வயதில் காவியா என்ற பெண் குழந்தையும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். வீட்டு அறையில் உறங்கிகொண்டிருந்த தம்பதியினர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: AC, Death, Fire, Fire accident, Police

அடுத்த செய்தி