• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் - மதுரை பாலம் இடிந்த விவகாரத்தில் நிதியமைச்சர் குற்றச்சாட்டு

தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்காமல் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர் - மதுரை பாலம் இடிந்த விவகாரத்தில் நிதியமைச்சர் குற்றச்சாட்டு

பழனிவேல் ராஜன்

பழனிவேல் ராஜன்

தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மதுரை பாலம் இடிந்த விவகாரத்தில் நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

  • Share this:
    மதுரை நத்தம் சாலையில் பிரம்மாண்டமான பறக்கும் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டும்பணியில் ஊழியர்கள் இன்றும் வழக்கம் போல் ஈடுபட்டு வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    மதுரை நத்தம் சாலையில் கட்டுப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 7 கிலோமீட்டர் நீளம் உடையது. மத்திய - மாநில அரசுகளின் கூட்டாக இணைந்து மேற்கொண்டு வரும் இந்த மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேம்பாலத்தின் ஒரு பகுதியை இணைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பாலம் இடிந்த விவகாரம் குறித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் ராஜன், ‘பாலம் இடிந்து விழவில்லை. ஹைட்ராலிக் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய பணியில் 2 ஊழியர்களை மட்டுமே ஏன் ஈடுபடுத்தினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படாமல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பணிக்கு பயன்படுத்தும் இயந்திரங்களை முறையாக ஆய்வு செய்யாமல் இருந்ததும் விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் விசாரணை நடத்தப்படும். பணியை தொடர்ந்து மேற்கொள்வது குறித்து ஆட்சியர் முடிவு செய்வார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: