Home /News /tamil-nadu /

மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை; 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை; 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை; 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை; 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!

மொபைல் போனில் பள்ளி பாடங்கள் படிக்கும் நேரம் தவிர்த்து, அதிக நேரம் மொபைல் கேம் விளையாடி வந்துள்ளார். குறிப்பாக, Free fire போன்ற வன்மம் நிறைந்த விளையாட்டுக்களை அதிகம் விளையாடி வந்துள்ளார்.

மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன் ஜெய் பிரகாஷ் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் வாயிலாக பள்ளி பாடங்கள் நடைபெற்று வருகின்றன. அதற்காக ஜெய் பிரகாஷிற்கு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் தந்தை ரஞ்சித்குமார்.

அந்த மொபைல் போனில் பள்ளி பாடங்கள் படிக்கும் நேரம் தவிர்த்து, அதிக நேரம் மொபைல் கேம் விளையாடி வந்துள்ளார். குறிப்பாக, Free fire போன்ற வன்மம் நிறைந்த விளையாட்டுக்களை அதிகம் விளையாடி வந்துள்ளார். இதனை அவ்வப்போது குடும்பத்தினர் எச்சரித்து வந்துள்ளனர்.

Also read: நிற்காமல் சென்ற மினி வேன்: தங்களை கடத்திவிட்டதாக வேனில் இருந்து குதித்த பள்ளி மாணவர்கள் படுகாயம்!

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மொபைல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையானது போல நாள் முழுவதும் விளையாடி வந்துள்ளார் ஜெய் பிரகாஷ். இதனை கவனித்த அவரது தந்தை ரஞ்சித், மிக கடுமையாக கண்டித்ததுடன், அவரிடம் இருந்து மொபைல் போனை வாங்கி, படிப்பிற்காக மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார்.

இதனால் மன உளைச்சலும், விரக்தியும் அடைந்த ஜெய் பிரகாஷ் நேற்றிரவு வீட்டில் இருந்த மின்விசிறியில் போர்வையின் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றிய சுப்பிரமணியபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் அதிகமாக மொபைல் பயன்பாட்டிற்கு அடிமையாக மாறி வரும் சூழலில், ஊரடங்கு காலம் அதனை மேலும் அதிகரித்ததன் காரணத்தால் தற்போது 10 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலமை மோசமாகி கொண்டிருப்பது பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also read: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சம் நபர்கள் காத்திருப்பு!

இதற்கு தேவையான எச்சரிக்கை உணர்வை பெற்றோர்கள் பெற வேண்டும் என்றும், பள்ளிகள் இது குறித்து போதிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Esakki Raja
First published:

Tags: Madurai, Suicide

அடுத்த செய்தி