முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணான நெல் மூட்டைகள் - இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர்

அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணான நெல் மூட்டைகள் - இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர்

வீணான நெல் மூட்டைகள்

வீணான நெல் மூட்டைகள்

உடனடியாக விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்,  அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து, மக்கி வீணான நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் கண்ணீர்விட்டு கோரிக்கைவைத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் நெல் விளைவிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அறுவடை செய்யப்பட்டது. அந்த நெல்களை தமிழக அரசு ஆங்காங்கே நெல்கொள்முதல் நிலையங்களை அமைத்து கொள்முதல் செய்து வந்தது.

இதன் தொடர்ச்சியாக, அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தகுளத்தில் கடந்த சில நாட்களாக செயல்பட்டுவந்த நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்மூட்டைகள் சமீபத்தில் பெய்த கோடை மழையின் காரணமாக முற்றிலுமாக நனைந்து, மக்கி வீணாகியுள்ளது.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு எந்தவித பணமும் வழங்காததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது மழையில் நனைந்து வீணாகி வருவதால் கூடுதல் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த நெல் மூட்டைகள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் முழுவதுமாக நனைந்து மூட்டையின் அடியில் கரையான் அரித்தும், முழுவதுமாக முளைத்தும் சில முட்டைகள் மக்கியும் காணப்படுகிறது.

Also read... புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

உடனடியாக விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்,  அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Madurai, Paddy fields