Home /News /tamil-nadu /

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் மரணம்

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு கொரோனாவால் மரணம்

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு

மதுரை முன்னாள் எம்.பி ஏ.ஜி.எஸ். ராம்பாபு

Ex MP Rambabu | கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்பாபு சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60.

    மதுரை விளக்குதூண் அருகே உள்ள இல்லத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு கடந்த 3 நாட்கள் முன்பு திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் ராம்பாபுக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ராம்பாபு 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ராம்பாபு, முதன்முறையாக கடந்த 1989ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் காங்கிரஸ் சார்பில் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஒருமுறையும் எம்பியாக இருந்துள்ளார்.

    Also Read : ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி

    ராம்பாபு 1998-ம் ஆண்டு சுப்பிரமணியசுவாமியுடன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன்பின் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. தான் எம்.பி.யாக இருந்த காலத்தில் ஏ.ஜி.எஸ்.ராம்பாபு மதுரைக்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona, Madurai

    அடுத்த செய்தி