மூத்த மகளுக்கு முறையற்ற உறவு - தாய், மகள் சரமாரியாக வெட்டிப் படுகொலை!

Youtube Video

கடந்த திங்கள் கிழமை இரவு நீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

 • Share this:
  மேலூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மர்மக் கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்துள்ளது. மூத்த மகளின் முறையற்ற உறவை கண்டித்ததால் படுகொலை நிகழ்த்தப்பட்டதா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

  மதுரை மாவட்டம் மேலூர் அருகே பதினெட்டாங்குடியைச் சேர்ந்தவர், 47 வயதான நீலாதேவி, இவருக்கு அகிலாண்டேஷ்வரி, மகேஷ்வரி என 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், இளைய மகள் அகிலாண்டேஷ்வரி கருத்து வேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து தாய் நீலாதேவியுடன் வசித்து வருகிறார். மூத்த மகள் மகேஷ்வரி கணவருடன் அதே ஊரில் அருகில் வசித்து வருகிறார்.

  இந்நிலையில் மகேஷ்வரிக்கு அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் முறையற்ற உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அறிந்ததும் தாய் லீலாதேவியும், இளையமகள் அகிலாண்டேஷ்வரியும், மகேஷ்வரியைக் கண்டித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை வற்புறுத்தி கூறிய நிலையில், மகேஷ்வரி சில மாதங்களாக உறவைத் துண்டித்துள்ளார்.

  இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை இரவு நீலாதேவியும், அகிலாண்டேஷ்வரியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

  அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பியோடினர். தகவலின் பேரில் விரைந்து வந்த மேலூர் போலீசார், கொலையான இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் நீலாதேவியின் மூத்த மகள் மகேஷ்வரிக்கு முறையற்ற உறவு இருந்து வந்ததும். அதை கொலையான தாயும், மகளும் கண்டித்ததும் தெரியவந்தது.

  முறையற்ற உறவைக் கண்டித்ததால் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

  கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில், கொலைக்கான காரணம்குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தூங்கிக் கொண்டிருந்த தாய், மகள் இருவரையும், மர்மநபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் மேலூர் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: