ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை மாநகராட்சியின் அலட்சியமான சாலை பணிகள் - மீனாட்சியின் தேரை இழுக்க முடியாமல் திணறிய பக்தர்கள்!

மதுரை மாநகராட்சியின் அலட்சியமான சாலை பணிகள் - மீனாட்சியின் தேரை இழுக்க முடியாமல் திணறிய பக்தர்கள்!

மீனாட்சி அம்மன் கோவில் விழா

மீனாட்சி அம்மன் கோவில் விழா

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அஷ்டமி சப்பரம் பக்தர்களால் இழுத்த இடத்திலிருந்து நிற்காமல் இழுத்துச் செல்வது வழக்கம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகளை முறையாக சீரமைக்காத காரணத்தால், மீனாட்சி அம்மன் கோவிலின் அஷ்டமி சப்பர விழாவின் போது தேரை இழுத்து செல்வதற்கு மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.

இந்த தேரோட்டத்திற்காக மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்தனர்.

Also read... மதுரையில் அனுமதி இன்றி ஹெலிகாப்டர் சேவை - ₹4.25 லட்சம் ஜி.எஸ்.டி வரி வசூல்

திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் சரியாக நடந்து வந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் மதுரையின் ரோடுகளை முறையாக சீரமைக்காமல் வைத்திருந்தனர் மாநகராட்சி நிர்வாகத்தினர். இதனால் தேரோடும் அந்த மதுரையின் வெளி வீதிகள் முழுவதும் கரடு முரடாக இருந்ததால் அஷ்டமித் சப்பரத்தை பக்தர்கள் இழுக்க முடியாமல் இழுத்து வந்த காட்சி மதுரை மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது.

Also read... “ஜல்லிக்கட்டு தான் வாழ்வின் ஒரே மகிழ்ச்சி” - தீவிர பயிற்சியில் காளைகள், காளையர்கள்!

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாநகரத்தில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் அஷ்டமி சப்பரம் பக்தர்களால் இழுத்த இடத்திலிருந்து நிற்காமல் இழுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை ஆட்சியாளர்களின் கவனிப்பாரற்ற ரோடுகள் முழுவதும் பெயர்ந்து கிடந்ததால் ஆங்காங்கு நின்று பக்தர்கள் இழுக்க முடியாமல் இழுத்துச் சென்றனர் என்று பக்தர்கள் வேதனை படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madurai, Temple