வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல மதுரை வந்த பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கோப்புப் படம்

திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்க படாத காரணத்தால் சில பயணிகள் பேருந்து நிலையத்திலேயே செய்வதறியாது தவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
முழு ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்ல மதுரை வந்த பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கொரோனா பாதிப்பின் 2 ஆம் அலை வேகமெடுத்து வரும் நிலையில் இன்று அதிகாலை 4 மணி முதல் மே 24 அதிகாலை வரை முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் சுமார் 20,000 பேர் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்காக மதுரை வந்துள்ளனர்.

Also read... அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டெசிவர் விநியோகிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை

இதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்த பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் சொற்ப பயணிகள் பயணம் செய்தனர்.

அதே நேரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்க படாத காரணத்தால் சில பயணிகள் பேருந்து நிலையத்திலேயே செய்வதறியாது தவித்தனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: