Home /News /tamil-nadu /

ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை  தொந்தரவு செய்ய வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

    ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக  எழுந்த புகாரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ராஜேந்திரபாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி ஆனதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தற்பொழுது மேலும் 3 தனிப்படை அமைத்து மொத்தம் 6 தனிப்படை மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக  முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் சகோதரி லட்சுமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடுங்கள் , விசாரணை செய்யுங்கள். அவரது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனக் கூறிவழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Aavin, ADMK, Crime | குற்றச் செய்திகள், Police, Rajendra balaji

    அடுத்த செய்தி