உள்ளாட்சித் தேர்தலின்,
மதுரை 16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில்
அதிமுக வேட்பாளரை விட
திமுக வேட்பாளர் 9635 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார் ஏற்கனவே அதிமுகவிடம் இருந்த 16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியை தற்போது திமுக கைப்பற்றியுள்ளது.
மதுரை 16-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது திமுக சார்பில் ஜெயராஜ் அதிமுக சார்பில் தமிழகன் மற்றும் நாம்தமிழர், மக்கள் நீதி மையம், தேமுதிக, அமமுக, சுயேச்சை உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இதனை அடுத்து வாக்கு எண்ணும் பணி மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.
மொத்தம் 17 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுக வேட்பாளர் ஜெயராஜ் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார் 17 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் மொத்தம் பதிவான 39,377 வாக்குகளில் திமுக வேட்பாளர் ஜெயராஜ் 22,857 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தமிழழகன் 13,222 வாக்குகளும் பெற்றனர்.
இதில் திமுக வேட்பாளர் ஜெயராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தமிழழகனைவிட 9,635 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். வெற்றியைத் தொடர்ந்து திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
543 வாக்குகள் செல்லாத வாக்குகள் பதிவாகியிருந்தது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அபிதா ஹனீப் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இந்த வெற்றியின் மூலம் அதிமுக வசமிருந்த 16-வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவியை திமுக தனது வசமாக்கி கொண்டது.

திமுக வேட்பாளர் வெற்றி
Must Read : நாமக்கல்லில் ‘அதிமுகவின் கோட்டை’யை கைப்பற்றிய திமுக!
திமுக வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர் - சிவக்குமார், திருமங்கலம்.இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.