தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டுமென்றால்
திமுக மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல வேண்டும் என்று
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பிரதமர்
மோடி எப்போது தமிழகம் வந்தாலும் திமுக தலைவர்கள், தொண்டர்கள் வரவேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மதுரை சிந்தாமணி அருகே உள்ள தனியார் விடுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை பாஜக மற்றும் தென் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த அண்ணாமலை, வருகிற 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ள 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக பிரதமர் திறக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளனர். பாஜக தலைமையிடத்திலிருந்து நிகழ்ச்சிக்கான எந்த ஒரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.
பிரதமர் வருகை தரும் பட்சத்தில் பாஜக சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படும். ஓமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநில அரசு 31 தேதி புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதற்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதே பாஜகவின் எண்ணம்.
ஜனவரி 10-ஆம் தேதிக்கு மேல் புதிய கட்டுப்பாடுகள் மாநில அரசு விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அறிவிப்பு ஏதும் வராத பட்சத்தில் மாநில அரசு விதிமுறைக்கு உட்பட்டு பாரதப்பிரதமர் நிகழ்ச்சி நடத்தப்படும். பாஜக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டால் தமிழக மக்களுடைய கலாச்சாரத்திற்கு பிரதமர் மோடிக்கு கௌரவம் கொடுக்கும் விதமாக தான் இருக்கும். இதை விமர்சனம் செய்வது நியாயமற்றது என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: நடமாடும் எம்.எல்.ஏ. அலுவலகம்: பொதுமக்களிடையே வரவேற்பு
எதிர்க்கட்சி இருந்த போது கோ-பேக்-மோடி என்று சொன்ன திமுக., தற்போது வரவேற்பது மத்திய அரசுடன் இணக்கமாக செல்வதற்கான முயற்சியா என்ற கேள்விக்கு, பத்தாண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுகவினர் கடந்த 3 ஆண்டுகளாக எதிர்ப்பு அரசியலை தமிழகத்தில் கொண்டு வந்துள்ளனர். திமுக தேவையை விட அதிகமான வன்மத்தை எதிர்ப்பாக கொண்டு வந்து தமிழக அரசியலில் கலந்துவிட்டனர்.
ஆட்சி பொறுப்பேற்று கடந்த மூன்று மாதங்களில் எதிர்க்கட்சி போன்றே திமுக அரசு செயல்படுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி நடந்து கொண்டதோ அதே போன்று ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பும் மத்திய அரசிடம் செயல்படுகிறது.
தமிழக அரசு புரிந்துகொண்டு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் மாநில அரசுக்கு நல்லது எனவும் திமுக அரசின் தலைவர்கள்-அமைச்சர்கள் தொண்டர்கள் உட்பட அனைவரும் பாரதபிரதமர் எப்போது தமிழகம் வந்தாலும் அனைவரும் வரவேற்க வேண்டும். பிரதமர் வருவதென்பது தமிழ்நாட்டின் நலனிற்காக மட்டுமே என்றும் அண்ணாமலை தெரிவித்தார்
மேலும் படிக்க: திமுகவுக்கு அம்னீசியா உள்ளது: பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம்
மேலும், மதுரையை சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஒரு பெரிய இடத்தை தமிழக அரசு விரைவில் கையகப்படுத்தி கொடுக்க வேண்டும்., அதற்காக தமிழக எம்பிக்கள் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து மத்திய அமைச்சருக்கு அறிக்கையாக தகவல் அளிப்பதை விட்டுவிட்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.