'தம்பி ஸ்டாலின் உடன்பிறப்புக்கள்': கவனம் ஈர்க்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய திமுக பிரமுகர்!

கவனம் ஈர்க்கும் போஸ்டர்

கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் கருணாநிதி.

 • Share this:
  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது.

  தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 1969ஆம் ஆண்டு திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த நிலையில், அறிஞர் அண்ணாவின் மீது அளவற்ற அன்பு கொண்ட கருணாநிதி அவர் வழியில் கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வந்தார்.

  கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதியன்று வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் கருணாநிதி. இந்நிலையில் அவரது மூன்றாமாண்டு நினைவு தினம் இந்த மாதம் 7 ம் தேதி வர உள்ளதையொட்டி திமுகவினர் பல்வேறு விதமான சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.

  இந்த நிலையில் மதுரை தல்லாகுளம் பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த சுவரொட்டியில் வீட்டில் இருந்து கருணாநிதி புறப்படுவது போலவும், அவர் தனது மனைவியிடம் “ஸ்டாலின் உடன்பிறப்புகள் யாராவது கேட்டால் நான் அண்ணாவை பார்க்க செல்கிறேன் என சொல்லு என கூறும் வகையில் உணர்ச்சிகரமான வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.

  மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணாவும், கருணாநிதியும் அண்ணன் தம்பி போல உடன்பிறப்புக்களாய் வாழ்ந்தவர்கள் என்பது குறியிடத்தகுந்த நிலையில் இந்த போஸ்டர் திமுக தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  வெங்கடேஸ்வரன், செய்தியாளர் - மதுரை
  Published by:Arun
  First published: