மதுரைக்காரங்க எப்படி இருக்காங்கனு கேப்டன் விசாரிக்க சொன்னார் - தேர்தல் பரப்புரையில் பிரேமலதா விஜயகாந்த்
மதுரைக்காரங்க எப்படி இருக்காங்கனு கேப்டன் விசாரிக்க சொன்னார் - தேர்தல் பரப்புரையில் பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakant: தி.மு.க, அ.தி.மு.க இருகட்சிகளும் 60 ஆண்டுகளாக பொய் வாக்குறுதிகளை மட்டுமே தெரிவித்து ஆட்சி அமைத்து வருகின்றன - பிரேமலதா விஜயகாந்த்
மதுரை மாநகராட்சியில் தே.மு.தி.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலங்குளம் பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசியவர் நல்லா இருந்த சிட்டியை ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் சீரழித்தது மட்டுமே மிச்சம். விஜயகாந்த் நலமாக உள்ளார்.
மதுரை மக்களை நலம் விசாரிக்க சொன்னார்.
ஆட்சி, அதிகார, பண பலத்தை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். எல்லா வார்டுகளிலும் பணம் கொடுப்பதில் தான் தி.மு.கவும், அ.தி.மு.க-வும் நினைக்கிறது.
இரு கட்சிகளும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் கடந்த 50 ஆண்டுகளாக எடுக்கவில்லை.
பொங்கல் பரிசு பொருட்கள் தரமற்ற நிலையில் வழங்கப்பட்டன, 1,000 ரூபாய் உரிமை தொகை, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தி.மு.க, அ.தி.மு.க இருகட்சிகளும் 60 ஆண்டுகளாக பொய் வாக்குறுதிகளை மட்டுமே தெரிவித்து ஆட்சி அமைத்து வருகின்றன. தேர்தல் வந்ததால் 1000 ரூபாயை விரைவில் தருவதாக ஸ்டாலின் சொல்கிறார்.மகளிர் உரிமை தொகையை கொடுக்காமல் மீண்டும் ஏமாற்றினால் முதலமைச்சரால் தமிழகத்தில் எங்கும் வரவே முடியாது” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.