Home /News /tamil-nadu /

ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை... வைரலாகும் போஸ்டர்

ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு அஜித் ரசிகர்கள் எச்சரிக்கை... வைரலாகும் போஸ்டர்

ஜனவரி 13 அல்லது 14-ம் தேதி வலிமை வெளியாகும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதையொட்டி ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகுவதால் அஜித் ரசிகர்கள் சிலர் கொந்தளிப்பில் உள்ளனர்.

    அஜித் குமார் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    வலிமை படத்தின் புரொமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்திலிருந்து விசில் தீம் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    வலிமை படத்தின் போஸ்டர், மோஷன் போஸ்டர், 2 பாடல்கள் ஆகியவை இதுவரை வெளிவந்துள்ளன. டீசர் வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்ததாக ட்ரெய்லர் மட்டுமே வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் எச்.வினோத் நேர்காணல் ஒன்றில் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : Valimai: அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ‘விசில் தீம்’ வெளியீடு!

    இதற்கிடையே, வலிமை படத்திற்கு போட்டியாக பாகுபலி இயக்குனர் ராஜமவுலி இயக்கியிருக்கும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகும் என்று முன்பு தகவல்கள் வெளியானது. சில வாரங்களுக்கு முன்பாக இந்த திரைப்படம் ஜனவரி 7-ம்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க : படம் வெளிவரும் முன்பே லாபம் பார்த்த வலிமை தயாரிப்பாளர்!

    சுமார் 450 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ஆர்.ஆர்.ஆர். வெளியாகவுள்ளது. இந்த சூழலில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. ஒருவேளை, அடுத்த அப்டேட் ரிலீஸ் தேதியாகக் கூட இருக்கலாம்.

    இதையும் படிங்க : பாலிவுட் நடிகை ஆலீயா பட்டின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்

    ஜனவரி 13 அல்லது 14-ம் தேதி வலிமை வெளியாகும் என்று பரவலாக பேசப்படுகிறது. இதையொட்டி ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாகுவதால் அஜித் ரசிகர்கள் சிலர் கொந்தளிப்பில் உள்ளனர். குறிப்பாக, போஸ்டர்களுக்கு பெயர் போன மதுரை ரசிகர்கள், தங்களது எதிர்ப்பை போஸ்டர் அடித்து ஒட்டி விட்டார்கள்.

    அந்த போஸ்டரில், ஆர்.ஆர்.ஆர். உங்கள் ஆட்டம் இப்போது முடியப் போகிறது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Valimai

    அடுத்த செய்தி