மதுரையில் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க நிவாரண மையம்: உதவிக்கரம் நீட்டும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்வதற்கான உதவி ஆகியவை தேவையெனில் கொரோனா நிவாரண மையத்திற்கு தொடர்பு கொண்டால், உடனடியாக உதவிகள் வழங்கப்படுகிறது.

  • Share this:
    கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்க உதவ முதன்முறையாக மதுரையில் கொரோனா நிவாரண மையத்தை தொடங்கிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 23 நாட்களில் மட்டும் 60 கொரோனா நோயாளிகளின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

    மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், படுக்கை வசதிகள், அவசரகால மருந்துகள், உணவுகள் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போன்ற  பணிகளை மேற்கொள்ளும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் முதன்முறையாக கொரோனா நிவாரண மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டாலோ, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான உணவுகள் , மருந்துகள் தேவை, மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களது மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்வதற்கான உதவி ஆகியவை தேவையெனில் கொரோனா நிவாரண மைய தொடர்பு எண்ணான : 86080 08108 ,9840, 59, 1891 என்ற எண்ணிற்கு அழைத்தால் உடனுக்குடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

    கடந்த 23 நாட்களில் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டுமதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயிரிழந்த 60 பேரின் உடல்களை அவர்களின் மத சம்பிராயங்களை பின்பற்றி நல்லடக்கம் செய்துள்ளனர்.

    மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சத்தான உணவுகளையும், ஆக்சிஜன் போன்ற தேவைகளையும் நிறைவேற்றிவந்த நிலையில் முதன்முறையாக மதுரையில் நிவாரண மையம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் முயற்சியில் ஈடுபடும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் சேவையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

    செய்தியாளர் - வெங்கடேஷ்வரன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: